Published : 31 Jul 2024 05:50 AM
Last Updated : 31 Jul 2024 05:50 AM
சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க,வாழ்வாதாரத்தை உயர்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை திட்டத்துக்கு படிப்படியாகநிதியை குறைத்து பாஜக புறக்கணித்துவருகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு 2015-16-ல் மொத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 2.09 சதவீதமாக இருந்தது,இப்போது 1.78 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துக்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலைவாய்ப்பு அடிப்படையில் ரூ.1.2 லட்சம் கோடி தேவைப்படுகிறது.
ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.86,000 கோடியில் நடப்பு நிதியாண்டில் கடந்த 4 மாதங்களிலேயே ரூ. 41,500 கோடி செலவழிக்கப்பட்டுவிட்டது. மீதி இருக்கிறரூ. 44,500 கோடியைத்தான் எஞ்சியுள்ள 8 மாதங்களில் செலவழிக்க வேண்டும்.
ஏற்கெனவே தமிழ்நாடு, மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மத்திய பாஜக அரசு கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை புறக்கணித்து சீரழிக்கிற வேலையை செய்து வரு கிறது. இதன்மூலம் கிராமப்புற பொரு ளாதாரத்தையே அழிவு நிலைக்கு கொண்டு செல்ல பாஜக முயற்சிக்கிறது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்கிற மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒரு வீட்டுக்கு 2015-ல் ஒதுக்கப்பட்டதொகை ரூ.5.07 லட்சம்தான் தொடர்ந்துஒதுக்கப்படுகிறது. இதில், மத்திய அரசு ஒரு வீட்டுக்குவழங்குகிற பங்கு ரூ. 1.5 லட்சம்தான். ஆனால், மாநில அரசு ரூ.12முதல் 14 லட்சம் வரை ஒரு வீட்டுக்கு கூடுதலாக செலவு செய்கிறது என முதல்வர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐந்தாண்டுகளில் 3 கோடிவீடுகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில்அறிவிப்பு வெளியாகிஇருக்கிறது. மத்திய அரசு வீட்டின் மதிப்பீட்டையும், பங்கையும் உயர்த்தாமல் வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியுமா என்கிற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் என்ன பதில் கூறப் போகிறார்?
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதிகுறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, உணவு மானியம் 4.04சதவீதத்திலிருந்து 3.34 சதவீதமாகவும், உரமானியம் 3.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, பி.எம். கிசான் திட்டம்1.8 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாகவும், கல்வித்துறையில் 3.75 சதவீதத்தில்இருந்து 2.61 சதவீதமாகவும், சுகாதாரத்துறைக்கு 1.91சதவீதத்திலிருந்து 1.85 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT