Published : 22 Jul 2024 05:50 AM
Last Updated : 22 Jul 2024 05:50 AM

ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தது ஏன்? - எச்.ராஜா கேள்வி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கர தத்த ஸ்ரீ பாதஸ்ரீ சாய் பீடத்தில், ஸ்ரீ திருவிக்ரம மகாதேவஞான வல்லப தத்தாத்ரேயர் மகா யாகம்நேற்று நடைபெற்றது. இந்த யாகத்துக்குமடத்தின் நிறுவனர் ஸ்ரீ லலிதா வல்லபாந்தமை தலைமை தாங்கினார்.இதில் பாஜகதேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது:

இந்து வாழ்வியலே சனாதனம் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை இலவசமாகத் தரப்பட வேண்டும் என்று சனாதனத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போது இவை வியாபாரமாக மாறிவிட்டன என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது: சனாதன தர்மத்தில் கட்டணம் இல்லாமல் கல்வி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கல்விக்குக் கட்டணம் வாங்கமுடியாமல் போகும் என்பதால்தான் உதயநிதி சனாதனத்துக்கு எதிராகப் பேசுகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடத்தை தமிழக போலீஸார் அவசரமாக கொலை செய்துள்ளனர். இதில் பல்வேறு சந்தேகங்கள்எழுகின்றன. இது திட்டமிட்ட கொலைதான். இதில் அதிகம் சந்தேகம் இருப்பதால்தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரிவருகின்றன என்று ராஜா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x