Published : 21 Jul 2024 02:52 PM
Last Updated : 21 Jul 2024 02:52 PM

தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகள் இயக்கும் வரைவு அறிக்கை மீது நாளை கருத்துக் கேட்பு

சென்னை: தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரவு திட்ட அறிக்கை மீது நாளை கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டது.

அதன்படி, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கிமீ கூடுதலாக இயக்கவும், பயணிகளின் தேவைக் கேற்ப சென்னையின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம், உள்துறைச் செயலர் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கில் நாளை (ஜூலை 22) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x