Published : 21 Jul 2024 09:21 AM
Last Updated : 21 Jul 2024 09:21 AM
சென்னை: தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடியில், சென்னை எழிலகம் பகுதியில் ரூ.5 கோடியில் 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பேரிடர்கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அப்பணிகளை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் இக்கண்காணிப்பு மையத்தின் சிறப்புகள் மற்றும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். தொடர்ந்து, கொளத்தூர் மற்றும் மாதவரம் பகுதியில் ரூ.91 கோடியில் அமைக்கப்பட்டு வரும் தணிகாசலம் கால்வாய் பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பெரியார் நகர் பகுதியில் ரூ.44 கோடியில் 17,443 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: யாரும் எதிர்பாராத வகையில் அதிக கனமழை பெய்யும்போது மக்கள் அவதிபடுவதை தடுக்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT