Published : 12 May 2018 02:44 PM
Last Updated : 12 May 2018 02:44 PM
முசிறி அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அதனைத் தடுத்த இரு காவலர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அய்யம்பாளையம் பகுதியிலுள்ள செவந்திலிங்கபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவின்போது, இரு குழுவினரிடையே தகராறு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முசிறி போலீஸார், தகராறில் ஈடுபட்டவர்களிடம், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அப்போது, அவர்களில் ஒரு குழுவினர் திடீரென போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் அரிவாளால் வெட்டியதில், காவலர்கள் மோகனுக்கு தலையிலும், உமர் முக்தாவுக்கு இடது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, காவலர்கள் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், மோகன் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக முசிறி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், போலீஸாரைத் தாக்கியவர்கள் அதே ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆசைத்தம்பியின் மகன்களான பிரேம் குமார், அவினேஷ் குமார் மற்றும் சிலர் எனத் தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களில் அவினேஷ் குமார் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை மிஸ் பண்ணிடாதீங்க:
பெண்ணை கொலை செய்து தானும் தற்கொலை செய்த இளைஞர்: திண்டுக்கல்லில் கோர சம்பவம்
இணை இயக்குநரை மணக்கிறார் 'ரங்கூன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT