Last Updated : 19 May, 2018 06:42 PM

 

Published : 19 May 2018 06:42 PM
Last Updated : 19 May 2018 06:42 PM

நீதிமன்றம் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: ஸ்டாலின்

உச்ச நீதிமன்றத்தின் மூலமாக அரசியல் மற்றும் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று திமுக செயலர் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக செயல் தலைவர் பொறுப்பை ஏற்றது முதல் ஸ்டாலின் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி கிளை நிர்வாகிகளுடன் கள ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டு, புதுச்சேரியில் இன்று ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரியில் வடக்கு, தெற்கு புதுச்சேரி மாநில நிர்வாகிகளும் அதைத் தொடர்ந்து காரைக்கால் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநில நிர்வாகிகள் எம்எல்ஏ சிவா, எஸ்பி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகை புகைப்படக்காரர்களும் அனுமதிக்கப்படவில்லை.

முதலில் படிவம் தரப்பட்டு அதில் குறைகளை பூர்த்தி செய்து பிரத்யேக பெட்டியில் போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பல நிர்வாகிகள் தங்களின் மனதிலுள்ள குறைகளையும் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து மாலையில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் மூலமாக அரசியல் மற்றும் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை நிரூபிக்க முடியாத பட்சத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். மதச் சார்பற்ற அணிகளாக

காங்கிரஸும், மதசார்பற்ற ஜனதாளமும் ஒருங்கிணைந்தது வரவேற்கதக்கது. மதச் சார்பற்ற அணிகள் வரவேண்டியது எங்கள் விருப்பம். அதை திமுக வரவேற்கிறது. கர்நாடகவில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x