Published : 17 Jul 2024 05:45 AM
Last Updated : 17 Jul 2024 05:45 AM

சென்னை விமான நிலையத்தில் மேலும் 2 குடியுரிமை அதிகாரிகள் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணிப்பவர்களுக்கும், தங்கக் கடத்தலுக்கும் உடந்தையாக இருந்த மேலும் 2 குடியுரிமை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், வெளிநாடு செல்லும் விமானப் பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்து அனுப்புவதற்காக குடியுரிமைப் பிரிவு அலுவலகம் செயல்படுகிறது.

மத்தியஉள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பிரிவின் தலைமை அலுவலகம், சென்னை சாஸ்திரி பவனில் உள்ளது. காவல் துறை, மத்திய உளவுத்துறையான ஐபி மற்றும் அரசு அதிகாரிகள் மாற்றுப்பணி முறையில் பணி அமர்த்தப்படுகின்றனர்.

இங்கு பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் பணியாற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க விஜிலென்ஸ் பிரிவு விமான நிலையத்தில் செயல்படுகிறது. கடந்த ஓராண்டாக குடியுரிமைப் பிரிவில் பணியாற்றி வந்த சரவணன் (காவல் துறை உதவி ஆய்வாளர்) முறைகேடுகளில் ஈடுபட்டதால் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதேபோல், போலி பாஸ்போர்ட்டில் பயணிப்பவர்களுக்கு உடந்தையாகச் செயல்பட்ட மேலும் 2 அதிகாரிகளை விஜிலென்ஸ் மற்றும் ஐபி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தற்போது அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் போலி பாஸ்போர்ட்டில் பயணிப்பவர்களுக்கும், தங்கக் கடத்தலுக்கும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x