Last Updated : 16 Jul, 2024 09:59 PM

 

Published : 16 Jul 2024 09:59 PM
Last Updated : 16 Jul 2024 09:59 PM

நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான அரசு மருத்துவரின் மருத்துவமனையில் திடீர் சோதனை

திருச்செங்கோட்டில் மருத்துவர் அனுராதாவுக்கு சொந்தமான மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு பெண் மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்தவர் அனுராதா. இவர் புரோக்கர்கள் மூலம் குழந்தைகளை விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி மருத்துவர் அனுராதா மற்றும் பெண் புரோக்கர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மருத்துவர் அனுராதா, தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தி வந்த அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான சிகாமணி மருத்துவமனை ஆகியவை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மருத்துவர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் திருச்செங்கோட்டில் சீல் வைக்கப்பட்ட மருத்துவர் அனுராதாவுக்கு சொந்தமான இடங்களில் சீலை அகற்றி உள்ளே இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன? , மேலும் எங்கெங்கு சோதனை நடத்தப்படுகிறது? தொடர் நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுவிவகாரம்


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x