Last Updated : 24 May, 2018 09:43 AM

 

Published : 24 May 2018 09:43 AM
Last Updated : 24 May 2018 09:43 AM

திருக்கழுக்குன்றத்தில் வாகன ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்; டிஎன் 19 ஏஎக்ஸ் என்ற பதிவெண்கள் இங்கு வழங்க ஏற்பாடு

திருக்கழுக்குன்றம் வட்டத்துக் கான மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், குன்றத்தூர், காஞ்சி புரம், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் மதுராந்தகம் வட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வாகனங்களைப் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் நிலை உள்ளது.

இதில், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நீண்ட தொலைவில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்து வாகனங்களைப் பதிவு செய்வதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே திருக்கழுக்குன்றம் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முடிவு செய்தது.

இதுதொடர்பாக, துறைரீதி யாக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இதன்பேரில், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஆசிரியர் நகரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் விரை வில் அமைக்கப்பட உள்ளதாக, செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள் ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கூறியதாவது:

``ஆசிரியர் நகரில் அமையும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், திருக்கழுக்குன்றம் வட்டத்துக்கு உட்பட்ட மக்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், வாகனங்களுக்கான தகுதிச் சான்று, ஓட்டுநர் மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். வாகனங்களுக் கான அனுமதிச் சீட்டு பெறுவதற் காக மட்டும், செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரவேண்டியதிருக்கும். இந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு டிஎன் 19ஏஎக்ஸ் என்ற பதிவெண் வழங்கப்பட உள்ளது. தற்போது, வாடகை கட்டிடத்தில் அலுவல கம் செயல்பட உள்ளது. இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி, விரைவில் திறந்துவைக்க உள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x