Published : 15 Jul 2024 11:10 PM
Last Updated : 15 Jul 2024 11:10 PM
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது.
“தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? அடுக்குமாடி குடியிருப்பு முதல் ஏழை எளிய மக்கள் வரை வாக்களித்தவர்களுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் பரிசா இந்த மின் கட்டண உயர்வு.
சொன்னதை செய்யாமல், சொல்லாத மின் கட்டண உயர்வை வாக்களித்த மக்களுக்கு பரிசளித்ததுதான் திராவிட மாடல். விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் திராவிட மாடல். ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்” என தமிழிசை தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், தொழில் துறையின் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT