Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM
குடிப்பதற்கு பணம் தராததால் அம்மாவின் கழுத்தில் கத்தியால் குத்திய மகனை போலீஸார் கைது செய்தனர். அவரது அம்மாவின் கழுத்தில் பாய்ந்த கத்தி ராயப்பேட்டை மருத்துவமனையில் நடந்த அறுவைச் சிகிச்சை மூலமாக வெளியே எடிக்கப்பட்டது
வேளச்சேரி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (65). இவரது மகன் சிவன் (28). இவர் சனிக்கிழமையன்று மது குடிப்பதற்காக பணம் கேட்டு, வள்ளியம்மாளை தொந்தரவு செய்துள்ளார். அவர் பணம் தரமறுத்துள்ளார். இதனால் கோப மடைந்த சிவன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வள்ளியம்மாளின் கழுத்தின் இடது பக்கத்தில் குத்தியுள்ளார்.
மகனின் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த வள்ளியம்மாள் கத்திக்கொண்டே கீழே விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். பயத்தில் ஓட முயன்ற சிவனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
ரத்தவெள்ளத்தில் கழுத்தில் கத்தியுடன் மயங்கி கிடந்த வள்ளியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் வள்ளியம்மாளின் கழுத்தில் 15 செமீ நீளத்துக்கு செலுத்தப்பட்டிருந்த கத்தியை வெளியே எடுத்தனர். சிகிச்சைக்கு பிறகு, வள்ளியம்மாள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சிவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT