Published : 14 Jul 2024 05:54 PM
Last Updated : 14 Jul 2024 05:54 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 பள்ளிகளில் காலை உணவு திட்டம் நாளை தொடக்கம்

காலை உணவு திட்டம்

செங்கல்பட்டு: அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 பள்ளிகளில் நாளை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைக்கிறார்.

2023-24ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல்வரால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 611 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 611 பள்ளிகளில் 39,002 பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும், 611 பள்ளிகளில் 933 சமையலர்கள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் பணிபுரிந்து பயனடைந்துள்ளனர். இத்திட்ட செயல்பாட்டிற்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், எரிபொருள் வாங்குவதற்கும் மற்றும் சமையலர்களுக்கான மதிப்பூதியம் ஆக மொத்தம் ரூ.575.99 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024-2025 நடப்பு நிதியாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், இலத்தூர், மதுராந்தகம், புனிததோமையார்மலை, திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஆகிய 7 வட்டாரங்களில் உள்ள 46 ஊராட்சிகளில் 55 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 3,402 மாணவர்கள் பயன்பெறும் வகையில் நாளை முதல் (15 ஆம் தேதி) தொடங்கப்படவுள்ளது.

காட்டாங்கொளத்துார் வட்டாரம், வண்டலுார் ஊராட்சி, வில்லிஸ் தொடக்கப்பள்ளியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

அதேபோல், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் ஏ.சி நடுநிலைப்பள்ளி வேங்கைவாசல் ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூடுதல் ஆட்சியர் மக்களவை, சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைக்க உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x