Last Updated : 13 Jul, 2024 11:31 AM

3  

Published : 13 Jul 2024 11:31 AM
Last Updated : 13 Jul 2024 11:31 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி முகத்தில் திமுக

படங்கள்: எம்.சாம்ராஜ்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 17 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 17-வது சுற்றின் முடிவில் திமுக 106908 வாக்குகளும், பாமக 48123 வாக்குகளும், நாதக 9094 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவில் 757 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 58785 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியும், தொகுதியில் ஆங்காங்கேயும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்ட மனநிலையில் திமுக தொண்டர்கள் உள்ளனர். அதேபோல், சென்னையில் திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திலும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்லாத வாக்கு: வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல்வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.

இதுவரை 17 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 17-வது சுற்றின் முடிவில் திமுக 106908 வாக்குகளும், பாமக 48123 வாக்குகளும், நாதக 9094 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவில் 757 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 58785 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x