Published : 09 Jul 2024 08:28 PM
Last Updated : 09 Jul 2024 08:28 PM
சென்னை: தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு: தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி அபின் தினேஷ் மோதக் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி எச்.எம்.ஜெயராம் மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார் கடலோர காவல் படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி வினீத் தேவ் வான்கடே காவல் துறை தலைமையக நிர்வாகப் பிரிவில் இருந்து காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி கே.எஸ்.நரேந்திரன் நாயர், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கு ஐஜி அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஐஜியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி அன்புவுக்கு சிபிசிஐடி ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...