Published : 09 Jul 2024 12:33 PM
Last Updated : 09 Jul 2024 12:33 PM

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - இபிஎஸ் விமர்சனம்

சென்னை: "திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், "கடந்த 24 மணிநேரத்துக்குள் வந்த செய்திகள்:

● செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்.

● புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.

● தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.

● தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.

இனி இந்த திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை.

எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது.
மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு!" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்துக்குள் தமிழகத்தில் நடந்த குற்ற செய்திகளை குறிப்பிட்டு திமுக அரசை விமர்சனம் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 2 Comments )
  • L
    L. Panneerselvam

    தமிழகத்தில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் அரசுதான் பொறுப்பு என்பதைப்போல முன்னாள் முதல்வர் கூறுவது ஏற்புடையதல்ல. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது நிச்சயமாக ஒரு அரசின் கடமை, பொறுப்பு! ஆனால், தவறே-குற்றங்களே நடக்காத மாநிலமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் இயலாத காரியம். ஆளும் அரசை குறைசொல்வதாக நினைத்துக்கொண்டு, தமிழகத்தின் பெருமையையும், கௌரவத்தையும், அமைதியையும் அசிங்கப்படுத்தும் விதத்தில் முன்னாள் முதல்வர் ஈடுபடக்கூடாது.

  • J
    J. J. Kumar

    தனிப்பட்ட பிரச்சனைக்காக கொலைகள் நிகழும்போது அரசை குறை கூற கூடாது! கொலைக்கு தூக்கு தண்டனை தான் தீர்வு என்று கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்! கோடி கோடி யாக கொடுத்தாலும் உயிரை எவரும் கொடுக்கமாட்டார்கள்! வளைகுடா நாடுகளை பாருங்கள் !

 
x