Published : 07 Jul 2024 04:39 AM
Last Updated : 07 Jul 2024 04:39 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்கிறது

கோப்புப்படம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை (ஜூலை 8) மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

இதையடுத்து இத்தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 14-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட64 வேட்புமனுக்களில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினரிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில், நாளை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 8-ம் தேதி மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x