Published : 06 Jul 2024 06:04 PM Last Updated : 06 Jul 2024 06:04 PM
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: தமிழக பாஜக செயற்குழு தீர்மானம்
திருவள்ளூர்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் வானகரம் பகுதியில் நடைபெற்றது. இதில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், எல். முருகன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்தும், பாராட்டும்.
கள்ளச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்று கூறி வரும் கேரள அரசுக்கும், அதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கும் கண்டனம்.
தங்கள் உரிமைக்காக போராடி வரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சட்டம் - ஒழுங்கினை பராமரிக்கும் சக்தியை இழந்துவிட்ட திமுக அரசுக்கு வன்மையான கண்டனம்.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை தொன்றுதொட்டு பின்பற்றி வரும் அடையாளங்களை அழித்து ஒழிக்க நினைக்கும் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு கண்டனம்.
WRITE A COMMENT