Published : 01 Jul 2024 03:42 PM
Last Updated : 01 Jul 2024 03:42 PM

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூன் மாதம் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத் தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

2024 ஜன.1 முதல் 2024 ஜன. 31 வரை மொத்தம் 84,63,384 பயணிகளும், 2024 பிப்.1 முதல் 2024 பிப்.29 வரை மொத்தம் 86,15,008 பயணிகளும், 2024 மார்ச் 1 முதல் 2024 மார்ச் 31 வரை மொத்தம் 86,82,457 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024 ஏப்.1 முதல் 2024 ஏப். 30 வரை மொத்தம் 80,87,712 பயணிகளும், 2024 மே 1 முதல் மே 30 வரை மொத்தம் 84,21,072 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 2024 ஜூன் 21-ம் தேதி அன்று 3,27,110 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024, ஜூன் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,05,316 பயணிகள் (Online QR 1,86,140; Static QR 2,55,839; Paper QR 21,30,806; Paytm 4,06,230; Whatsapp - 4,33,352; PhonePe – 2,72,300; ONDC – 20,649), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 31,33,011 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 30,752 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 3,757 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 15,61,001 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x