Published : 01 Jul 2024 01:20 PM
Last Updated : 01 Jul 2024 01:20 PM

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக சுப்ரியா சாஹு நியமனம்

சென்னை: தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

> அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

> வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

> நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

> சுற்றுலா, இந்து சமய அறநிலையத் துறை செயலாளராக இருந்த கே.மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

> நீர்வளத்துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா தமிழ்நாடு செய்தித்தாள் காகித தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

> பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த பி.சந்திரமோகன், தற்போது இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலாளராக நியமனம்.

> கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலராக இருந்த மங்கத் ராம் சர்மா புதிய பொதுப்பணித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

> ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

> தமிழ்நாடு சாலை பிரிவு திட்டம்-2 திட்ட இயக்குனர் ஆர்.செல்வராஜ் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

> தமிழ்நாடு அரசு கேபிள்டிவி மேலாண் இயக்குனராக இருந்த ஏ. ஜான் லூயிஸ், தற்போது தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம்.

> வீட்டுவசதித்துறை கூடுதல் செயலர் எம்.விஜயலட்சுமி ஐஏஎஸ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

> நில சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாசலம் ஐஏஎஸ், தமிழக அரசின் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

> தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டி.என்.ஹரிஹரன் ஐஏஎஸ், நில சீர்திருத்த துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

> நகராட்சி நி்ர்வாகத்துறை முன்னாள் சிறப்பு செயலர் ஆர்.லில்லி ஐஏஎஸ், போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

> தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்த சாய் குமார் ஐஏஎஸ், தமிழக தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமனம்.

> அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் சி.என்.மகேஸ்வரன், தமிழ்நாடு உப்புக்கழக மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

> செய்தி துறை இயக்குனர் வைத்தியநாதன் ஐஏஎஸ், தமிழ்நாடு கேபிள் டிவியின் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

> தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குனர் டி.எஸ்.ஜவஹர் ஐஏஎஸ், சமூக சீர்திருத்த துறை செயலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x