Published : 01 Jul 2024 04:54 AM
Last Updated : 01 Jul 2024 04:54 AM
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: தனியார் மினி பேருந்துகளுக்கான புதிய வரைவு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தனியாரிடம் பயணிகள் போக்குவரத்து இருந்தால், லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். சேவை நோக்கத்தில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்துவிட்டால், பொதுத் துறையில் இயக்குவதே பொருத்தமாக இருக்கும்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து, மினி பேருந்து சேவை இல்லாத இடங்களில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மேக்சி கேப், டிரக்கர், வேன் போன்றவற்றையும், வசதி வாய்ப்பு உள்ளவர்கள் டாக்ஸி, கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் சிறிய முதலீடு மூலம் தினசரி வருவாய் ஈட்ட, ஷேர் ஆட்டோ, மேக்சி கேப் போன்றவற்றை இயக்கி வருகின்றனர். தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டால், அத்தகைய இளைஞர்களின் வருவாய் பாதிக்கப்படும். எனவே, அரசு பொறுப்பேற்று மினி பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும். மினி பேருந்துகள், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் மக்களுக்கு பயன் தருவதாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT