Published : 26 May 2018 08:10 AM
Last Updated : 26 May 2018 08:10 AM

இலங்கை யால தேசிய பூங்காவில் கடுமையாக போராடி பாம்பை விழுங்கிய முதலை: பயணி எடுத்த புகைப்படங்கள் வைரலானது

இலங்கையின் யால தேசிய பூங்காவில் கண்ணாடி விரியன் பாம்பை கடுமையான போராட்டத்துக்குப் பிறகு முதலை விழுங்கியது. இதை சுற்றுலாப் பயணி ஒருவர் புகைப்படம் பிடித்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

இலங்கையின் தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் யால தேசிய பூங்கா அமைந்துள்ளது. 979 சதுர கி.மீ. பரப்பரளவு கொண்ட இப்பூங்கா இலங்கையின் இரண்டாவது பெரிய பூங்கா ஆகும். இது 1900-ம் ஆண்டில் தேசிய வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இப்பூங்காவில் கண்ணாடி விரியன் பாம்பும், முதலையும் கடந்த வாரம் மோதிக் கொண்ட காட்சியை சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பூங்காவில் ஒரு குட்டையில் முதலையுடன் கண்ணாடி விரியன் பாம்பு நீருக்குள் போராடிக் கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் கடுமையாகப் போராடிய பாம்பு பின்னர் முதலைக்கு விருந்தானது என அந்த சுற்றுலாப் பயணி தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x