Published : 30 May 2018 09:42 AM
Last Updated : 30 May 2018 09:42 AM

கன்னடம் தாய்மொழி; திருக்குறள் அத்துபடி

மிழை தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழை தப்பும் தவறுமாகப் பேசியும், எழுதியும் வரும் நிலையில், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தளவாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் பிரவீன் 1,330 திருக்குறள்களையும் அடி பிறழாமல் ஒப்பித்து அசத்துகிறார்.

கரூர் மாவட்டம் தளவாபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 3 மகன்கள். 3-வது மகன் பிரவீன் (13). தளவாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்.

கடந்த ஆண்டு 7-ம் வகுப்பு படித்த பிரவீனுக்கு 1,330 திருக்குறள்களை சொல்லிக் கொடுத்தார் தலைமை ஆசிரியை பவுனு. தமிழ் மீதான ஆர்வமும் சேர்ந்துகொள்ள, இப்போது 1,330 திருக்குறள்களையும் அதிகாரம், குறளின் எண்ணை சொன்னால் அப்படியே அடி பிறழாமல் தவறு ஏதுமின்றி ஒப்பிக்கிறார். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவரின் இந்த சாதனையை அனைவரும் மெச்சுகின்றனர்.

பிரவீனின் திறனைக் கண்டு வியந்த ஆட்சியர் த.அன்பழகன், அவரைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். “தொடர்ந்து தமிழ் வழியில் படித்து, எதிர்காலத்தில் தமிழ் ஆசிரியர் ஆகவேண்டும் என்பதே என் லட்சியம்” என்கிறார் பிரவீன். வாழ்த்துவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x