Published : 25 May 2018 09:04 AM
Last Updated : 25 May 2018 09:04 AM
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு ரூ.396 கோடியில் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை குழாய்கள் பதிக்கும் பணி மும் முரமாக நடந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சுங்குவார்சத்திரம், பிள்ளைப்பாக்கம், வல்லம் ஆகிய பகுதிகளில் சிப்காட் உள்ளது. இங்கு கார், பைக், செல் போன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட,1200-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.
இந்தத் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவைகளுக்கு, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியம் மூலம், செம் பரம்பாக்கம் ஏரியில் இருந்து தின மும் 2.5 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கோடை காலத்தில் குடிநீர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறை கிறது.
இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, மூன் றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க முடிவு செய்தது. இதற்கு சிப்காட் நிறுவனம் ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து ரூ.396 கோடியே 50 லட்சம் திட்ட மதிப் பீடு தயாரிக்கப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிப்பு செய்து, குழாய் மூலம் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தற்போது, குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை யில் குழாய்கள் பதிக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, முதல் கட்டமாக இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட வுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர், கழிவுநீர் அகற்றல் வாரிய பொறியாளர் ஒருவர் கூறியதாவது: கழிவு நீரை, மூன்றாவது முறையாகச் சுத்திகரிப்பு செய்தால், குடிநீராகப் பயன்படுத்த முடியும். சிங்கப்பூரில் இந்த முறையில் சுத்தி கரித்து குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். அதே தொழில்நுட்பத்தில், தற்போது சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க உள் ளோம்.
கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, போரூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதுார் வழியாக ஒரகடம் வரை, 68 கி.மீ. தொலைவுக்கு ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 27 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் கள் புதைக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் ரூ.180 கோடி யில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 4.5 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT