உதகையில் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷாவின் 16-வது நினைவு தினம் அனுசரிப்பு

உதகையில் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷாவின் 16-வது நினைவு தினம் அனுசரிப்பு

Published on

உதகை: நாட்டின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷாவின், 16-வது நினைவு தினமான இன்று, உதகையில் அவரது கல்லறையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

ஃ பீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா, 40 ஆண்டு காலம் ராணுவ சேவை புரிந்தவர். தனது பணிக்காலத்தில், ஐந்து போர்களை சந்தித்தவர். போரின்போது, பாகிஸ்தானை தோற்கடித்தவர். ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று, குன்னூர் வெலிங்டன்னின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷாவின், 16-வது நினைவு தினமான இன்று, உதகையில் அவரது கல்லறையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

வெலிங்டனில் தனது இறுதிக்காலம் வரை வசித்தார் மானெக் ஷா. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், உதகையில் உள்ள பார்ஸி இன மக்களின் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

அவரது 16-வது நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தலைவர் கமாண்டன்ட் லெப்.ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்புபடைத் தலைவர் மற்றும் முப்படைத் தளபதிகள், ராணுவ பாதுகாப்புப் பயிற்சி கல்லூரியின் கமாண்டன்ட் சார்பாக ராணுவத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in