Published : 27 Jun 2024 10:56 AM
Last Updated : 27 Jun 2024 10:56 AM
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வருகிறது. அதாவது, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று (வியாழக்கிழமை) 2- வது நாளாக களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் சமவெளி பகுதிகளில் 145.80 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் 45 மில்லிமீட்டர் அதாவது நான்கு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று (வியாழக்கிழமை) 2- வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமவெளி பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவை காண முடிந்தது. பாபநாசம் அணை பகுதியில் பதினெட்டு மில்லி மீட்டரும் கொடுமுடி ஆறு அணைப்பகுதியில் 17 மில்லி மீட்டரும் கண்ணடியன் அணைக்கட்டு பகுதியில் 12.4 மில்லி மீட்டர் மணிமுத்தாறு அணை பகுதியில் 14.2 மில்லி மீட்டர் மூலைக்கரை பட்டியில் 10 மில்லி மீட்டரும் சேர்வலாறு அணை நம்பியாறு அணை மற்றும் களக்காடு சேரன் மகாதேவி ஆகிய பகுதிகளில் தலா 5 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
அம்பாசமுத்திரம் பாளையம் கோட்டை திருநெல்வேலி களக்காடு ஆகிய மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் மாவட்டத்தின் பிரதான அருவிகளில் ஒன்றான மணிமுத்தாறு அறிவிக்கும் களக்காடு தலையணை பகுதிக்கும் பொதுமக்கள் சென்று நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள நாலு முக்கில் சுமார் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாலு முக்கில் 118 மில்லி மீட்டர் ஊத்துமலை பகுதியில் ஒன்பது சென்டிமீட்டர் அதாவது 90 மில்லி மீட்டர் மழை பொழிவும் காக்காச்சி மலை பகுதியில் 82 மில்லிமீட்டர் அதாவது 8.2 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
மாஞ்சோலையில் 45 மில்லி மீட்டர் அதாவது 4.5 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவான நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 43.5 8 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. பாபநாசம் அணைக்கு சுமார் 5000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 805 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மணிமுத்தாறு அணைக்கு சுமார் 1000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையிலிருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை தொடரும் பட்சத்தில் இன்று பாபநாசம் அணை 100 அடியை எட்டிப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT