Published : 23 Jun 2024 04:10 PM
Last Updated : 23 Jun 2024 04:10 PM

சென்னையில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணியில் தொய்வு

சூளைமேடு திருவள்ளுவர்புரம் 1-வது தெருவில் மந்தகதியில் நடைபெறும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி. படம்: டி.செல்வகுமார்.

சென்னை​யில்​ தெருக்​களில்​ கழிவுநீர்​ நிரம்பி வழிந்து சுகாதார சீர்​கேடு ஏற்​படுவதைத்​ தடுக்க புதி​ய​தாக கழிவுநீர்​ குழாய்​கள்​ அமைப்​ப​தற்​கான பணிகளை சென்னை குடிநீர்​ வாரியம்​ மேற்​கொண்​டுள்​ளது. முதல்​கட்ட​மாக 109 மற்​றும்​ 112-வது வார்​டுகளில்​ உள்ள 36 தெருக்​களில்​ ரூ.24 கோடி​யில்​ பணிகள்​ நடை​பெறுகிறது. இந்​தப்​ பணிகளில்​ மிகவும்​ தொய்வு ஏற்​பட்டுள்​ள​தால்​ மக்​கள்​ பெரிதும்​ சிரமப்​படு​கின்​றனர்​.

கழிவுநீர்​ குழாய்​ பதிக்​கும்​ பணி​யில்​ முதலா​வ​தாக மனித நுழைவு வாயிலுக்​குப்​ பதிலாக இயந்​திர நுழைவுவாயில்​ (Machine Hole) அதிகபட்​ச​மாக 12 அடி உயரத்​தில்​ ரெடிமேடாக தெருக்​களில்​ குறிப்​பிட்ட இடைவெளி​யில்​ ஏற்​படுத்​தப்​படு​கிறது. பின்னர்​ பொக்​லைன்​ கொண்டு சுமார்​ 15 அடி ஆழம்​ வரை தோண்டி அங்​கே இயந்​திர நுழைவுவாயில்​ பதிக்​கின்​றனர்​. இதற்​காக தெரு​வின்​ மையப்​ பகுதி​யில்​ பள்​ளம்​ தோண்​டும்​போது எடுக்​கப்​படும்​ மண்​ இருபுறமும்​ கொட்டப்​படு​கிறது. அவற்றை உடனடி​யாக மூடா​மல்​ விட்டுவிடு​கின்​றனர்​. இத​னால்​ அவ்​வழியே போக்​கு​வரத்து தடைபடு​கிறது.

இது​குறித்து திரு​வள்​ளுவர்​புரம்​ பகுதி மக்​கள்​ கூறிய​தாவது: கழிவுநீர்​ குழாய்​ அமைக்க பள்​ளம்​ தோண்டி இருபுறமும்​ மண்ணை கொட்டிவிடுவ​தால்​ நடந்து செல்ல சிரமமாக இருக்​கிறது. முதி​ய​வர்​கள், பெண்​கள், குழந்​தைகள்​ அந்த இடத்​தைக்​ கடக்க முடி​யாமல்​ அவதிப்​படு​கிறார்​கள்​. வாகன ஓட்டிகள்​ அந்த வழி​யாகப்​ போகவே முடிவதில்​லை.

இதனிடையே மழை பெய்​து​விட்டால்​ நிலை​மை இன்னும்​ மோச​மாகிவிடு​கிறது. மண்​ சேறும்​ சகதி​யுமாகிவிடுவ​தால்​ வழுக்​கிவிழும்​ அபாயம்​ ஏற்​பட்டு நடந்து செல்லவே அச்​ச​மாக இருக்​கிறது. அத்​துடன்​ பள்​ளம்​ தோண்​டப்​பட்ட இடத்​தில்​ இருபுறமும்​ போதிய தடுப்​பு​கள்​ வைப்​ப​தில்​லை. இர​வில்​ ஒளிரும்​ சிவப்பு நிற ஸ்டிக்​கரும்​ ஒட்டப்​படுவதில்​லை. பள்​ளத்தை பக்​கவாட்டில்​ மூடிய பிறகு இயந்​திர நுழைவுவாயில்​ திறந்த நிலை​யிலேயே இருக்​கிறது. இந்த அச்​சுறுத்​தல்​ மாதக்​கணக்​கில்​ நீடிக்​கிறது. கழிவுநீர்​ குழாய்​ அமைக்​கும்​ பணிகள்​ மந்த கதி​யில்​ நடை​பெறுகிறது. இத​னால்​ 2 மாதங்​களாக அவதிப்​படு​கிறோம்​. இப்​பணி​யை விரைவாக முடித்து தார்​ சாலை அமைக்க வேண்​டும்​ என வலியுறுத்​தினர்​.

இது​ குறித்து சென்னை​ குடிநீர்​ வாரிய அதி​காரி​கள்​ கூறுகை​யில், “புதிய கழிவுநீர்​ குழாய்​கள்​ அமைக்​கும்​ பணிக்கு ஓராண்டு (2024 ஜனவரி முதல்​ டிசம்​பர்​ வரை) டெண்​டர்​ விடப்​பட்டுள்​ளது. ஆனால், வடகிழக்​குப்​ பரு​வ​மழை தொடங்​கு​ம் முன்​பே முடிக்​கத்​ திட்ட​மிட்டுள்​ளோம்​. அவ்​வப்​போது மழை பெய்​வ​தால்​ பணிகள்​ பாதிக்​கப்​படு​கிறது. தெரு ஓரங்​களில்​ குடிநீர்​ குழாய், ஏற்​கெனவே உள்ள கழிவுநீர்​ குழாய், மின்​சார ஒயர்​கள்​ செல்​வ​தால்​ இப்​பணி​யை இர​வில்​ மேற்​கொள்ள முடிவதில்​லை. இருப்​பினும், கழிவுநீர்​ குழாய்​ அமைக்​கும்​ பணி​யை விரைவுபடுத்த நட​வடிக்கை எடுத்​துள்​ளோம்" என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x