Published : 19 Jun 2024 04:54 AM
Last Updated : 19 Jun 2024 04:54 AM
ராமேசுவரம்: மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, ராமேசுவரம் மீனவர்கள் இன்று (ஜூன் 19) இரவு வரையிலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் அறிவுறுத்திஉள்ளனர். இதனால், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன்மற்றும் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், நாட்டுப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT