Published : 18 Jun 2024 06:43 AM
Last Updated : 18 Jun 2024 06:43 AM
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாள் நேற்றுஅனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டிஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் உயிர்நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், பெருமையுடனும் அவரைநினைவுகூர்கிறது. சொந்த ஊர்மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாத வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்குசவால் விடுத்து, திருநெல்வேலியின் அடக்குமுறை மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை படுகொலை செய்தார். அப்போது ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில்எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரையும் மாய்த்துக் கொண்டார். அவரது துணிச்சல், தேச சுதந்திரம் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது தியாகம் ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத்தூண்டி, நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நாட்டு விடுதலைக்காக இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு அடக்குமுறையை கையாண்ட ஆங்கிலேயஆட்சியாளர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று, தேச விடுதலைக்காக தன்னுயிரையும் கொடுத்த மாவீரன் வாஞ்சிநாதன். அவரது தன்னலமற்ற துணிச்சல், விடுதலை போராட்டத்துக்கு புது உத்வேகம்அளித்தது என்றால் அது மிகையாகாது. அவரது வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரை சிறையில் தள்ளிய ஆங்கிலேய அதிகாரிஆஷ் துரையை சுட்டுக் கொன்று,தாய்நாட்டுக்காக தன்னுயிரையும் அர்ப்பணித்தவர் மாவீரர் வாஞ்சிநாதன். இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்துக்காக தனக்குத் தானே முடிவுரை எழுதி,மக்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தட்டிஎழுப்பியவர். அவரது வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT