Published : 18 Jun 2024 08:44 AM
Last Updated : 18 Jun 2024 08:44 AM
சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில் வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992-ம் ஆண்டு பரங்கிமலை கன்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக வாக்குச்சாவடியை கைப்பற்றும் வன்முறையை அதிமுக அறிமுகப்படுத்தியது. அதில் நானே பாதிக்கப்பட்டேன். 2,000 வாக்குகள் இருந்த இடத்தில் 2,300 வாக்குகள் போட்டனர்.
எப்படியாவது பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு நிறைய இடங்களில் டெபாசிட் போனது. இந்த இடைத்தேர்தலிலும் டெபாசிட் போனால் பழனிசாமிக்கு மேலும் சிக்கலாகிவிடும் என்ற பயம்.
கருணாநிதி வழங்கிய 20 சதவீத இடஒதுக்கீட்டை நினைத்துப் பார்த்து, வன்னியர்கள் அத்தனை பேரும் திமுக கூட்டணிக்குதான் வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT