Published : 16 Jun 2024 06:45 PM
Last Updated : 16 Jun 2024 06:45 PM
மதுரை: மதுரை சோழவந்தான் தென்கரையில் இன்று திரைப்பட நடிகர், பாடகர் கலைமாமணி டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது மார்பளவு சிலை திறக்கப்பட்டது.
திரைப்பட நடிகர், பாடகர் கலைமாமணி டி.ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழாவின் இரண்டாம் நாள் விழா இன்று மதுரை தென்கரையிலுள்ள டிஆர்எம்.சுகுமார் பவனத்தில் நடைபெற்றது. டி.ஆர்.மகாலிங்கம்-கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம் மார்பளவு சிலை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவை பின்னணி பாடகி பி.சுசிலா குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். நாதஸ்வர தவில் இசைக்கலைஞர் வலையபட்டி சுப்பிரமணியம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி கே.கோபாலன் தலைமை வகித்தார். நடிகர் சங்க தலைவர் நாசர், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் நடிகர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஆர்.மகாலிங்கம் பேரன் ராஜேஷ் மகாலிங்கம்-வித்யா வரவேற்றனர்.
விழாவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன், டிஆர்.மகாலிங்கத்தின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். விழாவில் நடிகர்கள் செந்தில், அண்ணாதுரை கண்ணதாசன், இயக்குநர் சந்தானபாரதி, நடிகை சச்சு உள்பட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து மாலையில் டிஆர்எம்எஸ் சென்னை கிளாசிக் ஆர்கெஸ்ட்ராவின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
வெண்ணிற ஆடை நிர்மலாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மற்றும் நடிகர்கள், இசை கலைஞர்கள் மற்றும் பலர் கொண்டனர். அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஸ்ரீஹரி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நன்றி கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT