Published : 13 Jun 2024 05:59 AM
Last Updated : 13 Jun 2024 05:59 AM
திருப்பத்தூர்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து இன்று நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறினார்.
திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. தமிழக அரசு சமூக நீதியைநிலைநாட்டி வருவதாகக் கூறுவதுமுற்றிலும் தவறு. சமூக நீதிக்கும்,திமுகவுக்கும் சம்பந்தமே இல்லை.
தமிழகத்தில் உள்ள 33 பெரியஏரி மற்றும் ஆறுகளில், 5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று பாமகதொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் திமுக அரசு, ஒரு தடுப்பணையைக்கூட கட்டவில்லை. பாலாற்றில் தடுப்பணைகள் கட்டஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை- பாலாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக யாரையும் செயல்படவிட மாட்டோம். தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சியில் உள்ள கர்நாடகா மற்றும் கேரளா முதல்வர்களை சந்தித்து, நதிநீர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகாண வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் போதைப் பழக்கதுக்கு அடிமையானவர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜூன் 13-ம் தேதி (இன்று) நடைபெறும் கட்சியின் உயர்நிலை செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
தமிழக நலனுக்காக பாமக தொடர்ந்து போராடும். தமிழக அரசு பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை ஏமாற்றி வருகிறது. நீட் தேர்வு ரத்துசெய்யப்படும் என்று தமிழக அரசுதொடர்ந்து கூறி வருகிறது. மத்தியஅமைச்சரவையில் பாமகவுக்கு இடம் கேட்டு நாங்கள் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. அது பிரதமர் எடுக்கும் முடிவு.
இவ்வாறு அன்புமணி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT