Published : 12 Jun 2024 06:31 AM
Last Updated : 12 Jun 2024 06:31 AM
சென்னை: ரயில்வே பணிகள் காரணமாக, மின்சார மற்றும் விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் வில்லிவாக்கம் - ஆம்பூர் நிலையங்களுக்கு இடையே ரயில்வே பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - ஆவடிக்கு ஜூன் 13,14, 15, 16, 18, 19, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் அதிகாலை 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் வில்லிவாக்கம் - ஆவடி இடையே விரைவு பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அன்னனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது.
விரைவு ரயில்கள் நின்று செல்லாது: பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெறவுள்ளதால், செப்.20-ம் தேதி முதல் டிச.20-ம் தேதி வரை விரைவு ரயில்கள் இந்த நிலையத்தில் நின்றுசெல்லாது.
அதன்படி, மைசூர் - சென்னைசென்ட்ரலுக்கு செப்.19-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை இயக்கப்படும் காவிரி விரைவு ரயில் (16022), சென்னை சென்ட்ரல் - மைசூருக்கு செப்.19-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை இயக்கப்படும் காவிரி விரைவு ரயில் (16021), சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூருக்கு செப்.20 முதல் டிச.20-ம் தேதி வரை இயக்கப்படும் லால்பாக் அதிவிரைவு ரயில் (12607), சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூருக்கு செப்.20-ம் தேதி முதல் டிச.20-ம்தேதி வரை இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில் (12027) உள்பட 44 விரைவு ரயில்கள் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT