Published : 05 Aug 2014 08:18 AM
Last Updated : 05 Aug 2014 08:18 AM
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இந்தாண்டு கலந்தாய்வில் 98 ஆயிரத்து 867 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு (கவுன்சலிங்) கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இறுதி நாள் கலந்தாய்வில் பங்கேற்க 5,516 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 2,497 பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. கலந்தாய்வுக்கு 2,964 பேர் வரவில்லை.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், 2 லட்சத்து 4 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்கள் உள்ளன.
59,300 பேர் பங்கேற்கவில்லை
இந்த கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 929 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 59,300 பேர் கலந்தாய்வில் பங் கேற்கவில்லை. கலந்தாய்வின் மூலம் ஒரு லட்சத்து 5133 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால் 98 ஆயிரத்து 867 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.
இதையடுத்து இந்த இடங் களை நிரப்ப துணைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 6-ம் தேதியும் மற்றும் அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் நிரம்பாமல் உள்ள இடங்களுக்கு வரும் 7-ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT