Published : 07 Jun 2024 06:30 AM
Last Updated : 07 Jun 2024 06:30 AM
சென்னை: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற புதியஎம்.பி.க்கள். மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களில் வென்றுள்ளது. அதனால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்படவுள்ளது. இந்நிலையில், யார் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலும், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஸ்குமார் முன்னிலை யிலும் நடைபெற்றது.
இதில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அகில இந்தியகாங்கிரஸ் தலைவருக்கு தமிழககாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தின் நகல் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அஜோய்குமாருக்கும் அனுப்பப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT