Published : 26 Jan 2014 10:07 AM
Last Updated : 26 Jan 2014 10:07 AM

கலைஞர் திமுகவா.. அழகிரி பேரவையா?: ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனை

திமுக-விலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி பெயரில் ‘அழகிரி பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்க அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டு அழகிரியை நீக்கிவிட்டாலும் தேர்தல் நேரத்தில் அழகிரி நீக்கத்தால் கட்சிக்குள் குழப்பம் வந்துவிடுமோ என்ற அச்சம் கருணாநிதியின் உள்மனதை உதைக்கிறது. அதனால் தான், வெள்ளிக்கிழமை இரவு தென்மாவட்டச் செயலாளர்கள் அத்தனை பேரையும் சி.ஐ.டி.காலனி இல்லத்தில் ஒருசேர அமர வைத்துப் பேசி இருக்கிறார்.

பத்தரை மணி வரை காத்திருந்த கருணாநிதி

இந்த சந்திப்பு குறித்த தகவல் களை ’தி இந்து’விடம் பகிர்ந்து கொண்ட தென் மாவட்டச் செயலாளர் ஒருவர், ’’தலைவர் எங்களை அழைக்கவில்லை. நாங்க ளாகத்தான் அவரைப் பார்க்கப் போனோம். அனைவரும் வந்து சேருவதற்குள் இரவு பத்தரை மணியாகி விட்டது. அதுவரை காத்திருந்தார் தலைவர். எங்களோடு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் சேடபட்டியாரும் வந்திருந்தார்கள்.

கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பவர்களை ஊக்குவித்தது மாத்திரமல்ல.. கழகத்தினர் மீதே அழகிரி ஆட்கள் வன்கொடுமை புகார் கொடுக்க வைத்து திமுக-வில் தலித்களை கேவலமாக நடத்துகிறார்கள் என்ற அவச் சொல்லையும் உருவாக்கப் பார்த்ததைத்தான் தலைவரால் ஜீர ணித்துக் கொள்ளமுடியவில்லை. இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லி ஆதங்கப்பட்டார்.

தலைவர் சொல்படி நடப்போம்

’அழகிரியை நீக்குனதால தென் மாவட்டங்கள்ல ஏதாச்சும் பிரச்சினை வருமாய்யா?’னு தலைவர் கேட்டார். ’அதெல்லாம் எந்தச் சலனமும் இருக்காது. ஏற்கெனவே இருந்த அழகிரியின் பலம் வேறு; இப்போதிருக்கும் அழகிரி வேறு. கடந்த மூன்று வருடங்களில் கட்சிக்குள் அழகிரி தனக்கிருந்த செல்வாக்கை தானாகவே கெடுத்துக் கொண்டு விட்டார்.

எனவே தலைவர் எடுத்திருக்கும் இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இனி, நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களோ அதன்படி நாங்கள் நடந்து கொள்வோம்’ என்று சொல்லிவிட்டு பதினோரு மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம்’’ என்று சொன்னார்

பிறந்த நாளில் அழகிரி பேரவை

இதனிடையே, அழகிரி பிறந்த நாளில் ‘அழகிரி பேரவை’ என்ற அமைப்பை தொடங்க அவரது ஆதரவாளர்கள் ஆலோ சனை நடத்தி இருப்பதாகச் சொல்கி றார்கள். இதுகுறித்து பேசிய தென்மண்டல திமுக பொறுப்பாளர் ஒருவர், ‘’2001-ல் அழகிரிக்கு இதே போன்ற நெருக்கடி வந்தது. அப்போது, ‘அழகிரி பேரவை’ தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை அழகிரியே எங்களுக்கு தூண்டினார்.

ஆனால், பிரச்சினை எதுவாக இருந்தாலும் கட்சிக்குள் இருந்து தான் போராட வேண்டும் அதில்லாமல் தனியாக அமைப்பு தொடங்குவதெல்லாம் சரிப்பட்டு வராது’ன்னு நாங்க சொல்லிட்டோம். அதன்பிறகுதான் அந்த முயற்சியை கிடப்பில் போட்டார். இப்போது மீண்டும், ‘அழகிரி பேரவை’ தொடங்கப் போவதாக பேசுகிறார்கள். ‘கலை ஞர் திமுக' என்ற கட்சியை அழகிரி தொடங்க போவதாகவும் அதற்கான கொடியையும் தயார் செய்து விட்டதாகவும் கூட சொல்கிறார்கள். பேராசிரியர் குறித்த அழகிரியின் விமர்சனங்களைப் பார்த்தால் அவரும் ஏதோ முடிவெடுத்து விட்டது போல்தான் தெரிகிறது’’ என்று சொன்னார்.

அண்ணனின் சொல்படி நடப்போம்

அழகிரி பேரவை தொடங்கப் போவது குறித்து அழகிரி விசுவாசியான மிசா பாண்டியனிடம் கேட்டதற்கு, ‘அழகிரி பேரவையோ அழகிரி நற்பணி மன்றமோ’ அதுபற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியாது. அழகிரி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்திருக கிறோம். பிறந்த நாள் செய்தியாக அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நிச்சயம் நடப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x