Published : 30 May 2024 02:04 PM
Last Updated : 30 May 2024 02:04 PM
சென்னை: நார்வே நாட்டில் நடைபெற்று வரும் செஸ் போட்டி தொடரில் முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியில் ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நார்வே செஸ் போட்டி தொடரில் புதிய சாதனையாளர்களாக உருவெடுத்துள்ள தமிழகத்தின் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தாவுக்கும், வைஷாலிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருப்பது மறக்க முடியாத சாதனையாகும். அதேபோல், மகளிருக்கான நார்வே செஸ் போட்டி தொடரின் ஆரம்பப் போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி கிளாசிக்கல் சுற்றில் இந்தியாவின் ஹம்பி கோனேருவை தோற்கடித்திருப்பதும் அசாதாரண சாதனையாகும்.
பிரக்ஞானந்தாவும், வைஷாலியும் தொடர்ந்து வெற்றிப் பெற்று நார்வேயில் சாம்பியன் பட்டம் வெல்ல வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
My hearty congratulations to GMs @rpraggnachess & @chessvaishali for becoming new leaders at #NorwayChess 2024. Pragga defeating Magnus Carlsen in the Classical Chess round for the first time, while playing first time at Norway Chess is a remarkable achievement. Similarly,… pic.twitter.com/Ef3J3B4uCK
— Udhay (@Udhaystalin) May 30, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment