Published : 29 May 2024 06:04 AM
Last Updated : 29 May 2024 06:04 AM

சென்னை - திருநெல்வேலி உட்பட 3 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

சென்னை: சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகள் தேவைகள் அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து இச்சேவை நீட்டிக்கப்படுகிறது. அந்தவகையில், 3 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்விவரம் வருமாறு: திருநெல்வேலியில் இருந்து ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைகளில்) மாலை 6.45 மணிக்குவாராந்திர சிறப்பு ரயில் (06070) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) வாராந்திர சிறப்பு ரயில் (06069) புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்குதிருநெல்வேலியை அடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி,அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துபேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை - நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து ஜூன் 2, 16, 30 ஆகிய தேதிகளில் இரவு11.15 மணிக்கு சிறப்பு ரயில் (06019)புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 3, 17, ஜூலை 1 ஆகிய தேதிகளில் முற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் (06020) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இதுதவிர, நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே மற்றொரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x