Last Updated : 28 May, 2024 07:52 PM

 

Published : 28 May 2024 07:52 PM
Last Updated : 28 May 2024 07:52 PM

சேலத்தில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பு: மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் பிடிபட்ட 20 கிலோ எடையுள்ள ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்.  

சேலம்: சேலத்தில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை போடிநாயக்கன்பட்டி ஏரியில் வளர்த்த மர்ம நபர்கள் குறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம், போடிநாயக்கன்பட்டி ஏரி பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த ஏரி நீரை கொண்டு அருகில் உள்ள பலரும் விவசாய பாசனத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஏரி நீர் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையால், நீர் வளம் மிகுந்த பகுதியாக காட்சியளிக்கிறது.

போடிநாயக்கன்பட்டி ஏரியை சுத்தம் செய்து, சுற்றிலும் பூங்கா அமைத்து அழகுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கான பணி தொடங்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் முதற்கட்டமாக ஏரியில் உள்ள மீன்களை அப்புறப்படுத்தி, அதில் உள்ள நீரை உறிஞ்சி வெளியேற்றி தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக அதிகாரிகள் ஊழியர்களை கொண்டு ஏரியில் உள்ள மீன்களை பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி நீரில் இருந்து கன்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒவ்வொரு மீனும் ஐந்து கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக இருந்தது. அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை ஏரியில் விட்டு வளர்த்து வந்தது யார்? என்பது குறித்து முதல் கட்ட விசாரணையில் மீன் வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஏரி நீரை முழுமையாக வெளியேற்றி விட்டு, அதில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை பண்ணைகளில் வைத்து வளர்தது விற்பனை செய்தால், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதால், யாருக்கும் தெரியாமல் ஏரியில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர விட்டு மர்ம நபர்கள் விற்பனை செய்தனரா? என்ற கோணத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x