Published : 22 May 2024 11:16 AM
Last Updated : 22 May 2024 11:16 AM
பாபநாசம்: நெல்லை மாவட்டம் பாபநாசம் வனச்சரகத்தில் அடுத்தடுத்து மூன்று சிறுத்தைகள் கூண்டுவைத்து பிடிக்கப்பட்டு வனத்துக்குள் விடப்பட்டன.
பாபநாசம் வனச்சரகம் சுற்றியுள்ள வேம்பையாபுரம் மற்றும் அணவன் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தைகளை துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி வனச்சரக அலுவலர் சத்தியவேல் தலைமையில் வேம்பையாபுரம் மற்றும் அணவன் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி தெரியும் சிறுத்தைகளை பிடிப்பதற்கு கூண்டு வைக்கப்பட்டது.
17ம் தேதி அன்று வேம்பையாபுரத்தில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது அதனை அம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. துணை இயக்குநர் அறிவுறுத்தலின்படி வேம்பையாபுரம் மற்றும் அணவன் குடியிருப்பு பகுதியில் 3 கூண்டுகள் வைக்கப்பட்டன.
மேலும் பாபநாசம் வனச்சரக வனப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்பு மூலம் நேற்று (மே 21) அணவன் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று சிக்கிய நிலையில், தொடர் கண்காணிப்பு பணியில் இருந்தபோது இன்று அதிகாலை மீண்டும் வேம்பையாபுரத்தில் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT