Published : 21 May 2024 12:10 PM
Last Updated : 21 May 2024 12:10 PM
திருநெல்வேலி: மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசலாம் என்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நான்காவது நாளாக நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன் குழி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10,000 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,500 நாட்டு படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மீன்பிடி தடைக்காலம் கிழக்கு கடற்கரையில் அமலில் உள்ளது. அதனால் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலையில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாதததால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT