Published : 21 May 2024 10:02 AM
Last Updated : 21 May 2024 10:02 AM
கோவை: கோவை சின்னக்கல்லாரில் 122 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தை தவிர்க்கும் வகையில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது சில சமயங்களில் கோடைமழை கன மழையாகவும் பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (மே 20) கோவையில் பல்வேறு இடங்களில் மழை தூறல் இருந்தது. மாவட்ட நிர்வாகத்தினர் இன்று (மே 21) காலை வெளியிட்ட அறிக்கையின் படி சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 122 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தினர் இன்று (மே 21) காலை வெளியிட்ட அறிக்கையின்படி கோவையில் பெய்த மழையளவு விவரம் பின்வருமாறு: கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் 1.60 மில்லி மீட்டர், பி.என்.பாளையம் பகுதியில் 30.80 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேட்டுப்பாளையத்தில் 37 மில்லி மீட்டர், பில்லூர் அணையில் 10 மில்லி மீட்டர் ,அன்னூர் தாலுகா உட்பட்ட அன்னூர் பகுதியில் 31 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சூலூர் தாலுகா உட்பட்ட சூலூரில் 3.20 மில்லி மீட்டர், பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிறுவாணி அடிவாரப் பகுதியில் 30 மில்லி மீட்டர், வால்பாறை தாலுகா உட்பட்ட சின் கோனாவில் 66 மில்லி மீட்டர் ,சின்னக்கல்லாரில் 122 மில்லி மீட்டர் வால்பாறை பிஏபியில் 80 மில்லிமீட்டர் , வால்பாறை தாலுகாவில் 54 மில்லி மீட்டர் ,சோலையாரில் 25 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வரும் சூழலில் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், ஆனைமலை ஆகிய பகுதிகளில் உரிய உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT