Published : 19 May 2024 09:50 AM
Last Updated : 19 May 2024 09:50 AM
சென்னை: மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் மத்திய அரசின் ‘எய்ம்ஸ்' மருத்துவமனை ரூ.1,977 கோடி மதிப்பீட்டில் 222 ஏக்கரில் கட்டப்படுகிறது. 82 சதவீதம் நிதி தொகையான ரூ.1627.70 கோடியை ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுக்கு கடனாக வழங்குகிறது. மீதமுள்ள 18 சதவீதம் தொகையை மத்திய அரசு நேரடியாக மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு கொடுக்கிறது.
இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம், எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான டெண்டரை எடுத்துள்ளது. இரு கட்டங்களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், சமீபத்தில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடத்தியது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு அரசிதழில், ‘மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நியமிக்கப்படுகிறார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT