Published : 25 Aug 2014 10:13 AM
Last Updated : 25 Aug 2014 10:13 AM

ப.சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங். தலைவர் பதவி?: தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வராக முன்னாள் மத்திய நிதியமைச் சர் ப.சிதம்பரத்தை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. தலைவர் பதவியை பிடிப்பதற்காக ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், திரு நாவுக்கரசர் ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து ‘தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: தலைவர் பதவிக்காக பலபேர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம், வாசன், சுதர்சன நாச்சி யப்பன் இந்த மூவருக்கும் இடையில் தான் கடும்போட்டி நிலவுகிறது. நாச்சியப்பன் சோனியாவின் ஆதரவில் தனக்கு தலைவர் பதவி கிடைக்கும் என நினைக்கிறார். தமிழக காங்கிரஸில் தனக்கு உள்ள பலத்தை காட்டி தனக்கு அந்தப் பதவியை கேட்கிறார் வாசன். முதலமைச்சர் கனவில் இருக்கும் ப.சிதம்பரம், தனது அரசியல் பாரம்பரியத்தைக் காட்டி தலைவர் பதவிக்கு அடி போடுகிறார்.

அதேசமயம் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி ஓடியவர்களுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுப்பதை ராகுல் விரும்பவில்லை. இதனிடையே, சுதர்சன நாச்சியப்பனை சட்டம், நிதி, பணியாளர் நலன் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு அமைச்சகங் களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தலைவராக நியமிக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் கொடுத்துவிட்டது.

2004-லிருந்து இதுவரை இந்தப் பதவிக்கு மூன்றுமுறை சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறார் நாச்சி யப்பன். 32 எம்.பி-க்களைக் கொண்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலைக் குழுவுக்கு தலைவராக்கி விட்டு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியையும் அவருக்கு கொடுக்க வாய்ப்பில்லை.

எனவே இப்போதுள்ள சூழலில் தமிழகத்தில் காங்கிரஸை தூக்கி நிறுத்த, அரசியல் அனுபவ மும் நிதி பின்புலமும் கொண்ட ஒரே நபர் சிதம்பரம்தான். அதனால், அவரையே தலைவராக நியமித்து அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளிக்க காங்கிரஸ் தலைமை கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x