Published : 17 Apr 2018 09:49 AM
Last Updated : 17 Apr 2018 09:49 AM
க
டகடவென 1,330 குறளை யும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் வரிசை எண்ணைச் சொன்னாலே அந்தக் குறளையும் குறளைச் சொன்னால் அதன் வரிசை எண்ணையும் சரியாகச் சொல்லி திருக்குறளை ஒப்புவித்து சாதனை நிகழ்த்தி வருகின்றனர் விருதுநகர் மாவட்டத்தின் கடை கோடி கிராமத்தின் அரசு பள்ளி மாணவிகள்.
சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலை அருகே உள்ளது என்.சுப்பையாபுரம். மிகச்சிறிய இந்த கிராமத்தில் இயங்கி வரும்அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.சுப்பையாபுரம், என்.வெங்கடேஷ்புரம், புல்வாய்பட்டி, பெத்துரெட்டியபட்டி, சின்னத்தம்பியாபுரம், பெரியஓடைப்பட்டி, சின்னஓடைப்பட்டி, சமத்துவபுரம், சண்முகாபுரம், கரிசல்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 380 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் வழக்கமான பாடத்துடன் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தின மும் காலை சிறப்பு வகுப்பாக திருக்குறள் போதிக்கப்படுகிறது. தமிழாசிரியர் ரா.ராஜசேகரின் முயற்சியால் திருக்குறளில் ஒரு புதிய சகாப்தம் படைக்கத் தொடங்கியுள்ளனர் இப்பள்ளி மாணவ, மாணவிகள்.
1,330 குறளையும் மனப்பாடமாக ஒப்புவிப்பதற்கு பதிலாகதங்களின் தனித்த அடையாளத்தை காட்டும் வகையில், குற ளின் வரிசை எண்ணைச் சொன் னால் அந்தக் குறளையும் குறளைச் சொன்னால் அதன் வரிசை எண்ணையும் அடுத்த நொடியில் சொல்லிவிடுகிறார் கள் இம்மாணவிகள்.
எட்டாம் வகுப்பு மாணவி ரா. பிருந்தாலட்சுமி, ஒன்பதாம் வகுப்பு மாணவி ர.நாகஜோதி 1,330 திருக்குறளையும் எப்படி கேட்டாலும் எவ்வித தடுமாற்றோமோ, யோசனையோ இல்லா மல் உடனே சொல்லிவிடுகிறார்கள். ஏழாம் வகுப்பு மாணவிகள் ரித்யாஸ்ரீ, ப.ரோஷினி, விகாஷினி ஆகியோரும் அடுத்தடுத்து இதேபோன்று உருவாகி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழாசிரியர் ராஜசேகர் கூறும்போது, “மாணவர்களுக்கு தினமும் காலை 8.30 மணி முதல் 9.15 மணி வரை திருக்குறள் வகுப்பு நடத்தப்படும். தொடக்கத்தில் ஒரு சில மாணவ, மாணவிகளே வந்தனர். ஆசிரியர் தினவிழாவில் பிளஸ் 2 மாணவி கவிதா 800 குறளை கூறினார். அதையடுத்து மற்ற மாணவ, மாணவிகளுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. விரைவில், ஏராளமான மாணவ, மாணவிகளை 1,330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கவும் எண்ணைக் கூறினால் அக்குறளையும் குறளைக் கூறினால் அதன் வரிசை எண்ணையும் பொருளையும் கூறும் வகையில் தயார்படுத்த உள்ளேன்” என தெரிவித்தார்.
திருக்குறளை படிக்க வைப் பது மட்டுமல்ல ஆசிரியர்களின் நோக்கம். எக்காலத்துக்கும் தேவைப்படும் குறளை வாழ்கை நெறியாக மாணவர்களை ஏற்கச் செய்யும் நுட்பமான பணிஅது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT