Published : 16 May 2024 04:52 AM
Last Updated : 16 May 2024 04:52 AM

ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: கிராம மக்கள் சாலை மறியல் @ தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் மக்களைத் தாக்கும் யானையைப் பிடிக்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள். (உள்படம்) யானை தாக்கியதில் உயிரிழந்த திம்மராயப்பா.

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாகப் சுற்றி வருகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, சில வாரங்களாகக் கிராமப் பகுதிகளில் சுற்றி வருகிறது. கடந்த 15 நாட்களில் ஒற்றை யானை தாக்கியதில், 2 பேர்உயிரிழந்தனர்.

இதனிடையே, அலசெட்டி கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா (39) என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் சென்றபோது, யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், வழியில் அவர் உயிர்இழந்தார். அவரது குடும்பத்துக்கு வனத் துறை சார்பில் ரூ.50 ஆயிரம்நிவாரணத்தை வனப் பாதுகாவலர் கார்த்திகேயனி வழங்கினர்.

இதனிடையே, ஓசூர் வனக் கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் ஒற்றை யானை தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, உடனடியாக யானையைப் பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி, தளிஎம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமையிலான கிராம மக்கள், தேன்கனிக்கோட்டை வனத் துறை அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர்.

அப்போது அங்கு வந்த வனப் பாதுகாவலர் கார்த்திகேயனி, எம்எல்ஏ மற்றும் கிராம மக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, திடீரென தேன்கனிக்கோட்டை சோதனைச் சாவடி அருகே கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த டிஎஸ்பி சாந்தி மற்றும் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே, ஒற்றை யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x