Published : 13 May 2024 06:13 AM
Last Updated : 13 May 2024 06:13 AM

சென்னை - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோப்புப்படம்

திருச்சி: சென்னை எழும்பூர்- வேளாங்கண்ணி- சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில்(06037/ 06038) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை -வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்(06037) மே 17, 19, 24, 26, 31, ஜூன் 2, 7, 9, 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுவழித்தடத்தில், வேளாங்கண்ணி- சென்னை எழும்பூர் வாராந்திர ரயில்(06038) மே 18, 20, 25, 27, ஜூன் 1, 3, 8, 10, 15, 17, 22, 24, 29 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x