Published : 24 Aug 2014 10:05 AM
Last Updated : 24 Aug 2014 10:05 AM

வீட்டு வாசலில் தினமும் ஒரு திருக்குறள்: ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் தமிழ் ஆர்வம்

காவல்துறையில் ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற வரதராஜ னுக்கு இப்போது வயது 78. சென்னை கோடம்பாக்கம் சுப்பரா யன் நகரில் உள்ள வரதராஜனின் வீட்டு வாசலில் நிரந்தரமாக ஒரு தகவல் பலகை இருக்கிறது. அதில் தினமும் ஒரு திருக்குறளை எழுதி, அதற்கான பொருளுரையும் எழுதி வைக்கிறார் வரதராஜன். அவரிடம் பேசியபோது..

“கடந்த 6 வருஷமா எழுதிட்டுக் இருக்கேன். காமத்துப் பால் தவிர அனைத்து அதிகாரங்களையும் எழுதி முடிச்சு இப்ப ரெண்டாவது சுத்துப் போயிட்டு இருக்கு. நடைபயிற்சிக்கு செல்லும்போது, ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்ற பெருமாள் பழக்கமானார். அவர் தினமும் கவிதைகள் சொல்வார். அவரால்தான் பொழுதுபோக்காக தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பிச்சேன்.

சென்னை வள்ளுவர் கோட்டத் துல சனிக்கிழமைதோறும் உலக திருக்குறள் மைய ஆய்வுக் கூட்டம் நடக்கும். அதில் கலந்துகொள் வேன்.

அதுவரை கிடைக்காத தமிழ் அங்கே எனக்குக் கிடைச்சுது. அதிலிருந்துதான் எனது வீட்டு வாச லில் தினமும் ஒரு திருக்குறளை எழுதி வைக்க ஆரம்பிச்சேன். குறளுக்கு கருணாநிதி எழுதிய பொருளுரையைத்தான் எழுதி வைக்கிறேன்.

திருக்குறள் கூட்டங்களுக்கு 30 முதல் 50 பேர் வரை வருவாங்க. சில நேரங்கள்ல மதிய உணவு என் செலவுல ஏற்பாடு செய்வேன். திருக்குறள் மீது எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்துட்டு, ‘திருக்குறள் தூதுவர்’ என்ற பட்டம் கொடுக்க முடிவெடுத்தாங்க.

ஆனா, அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கு. மாமிசம் சாப்பிடாம இருக்கணும், ஊர் ஊராய் போய் திருக்குறளைப் பரப்பணும். எனக்கு வயசா கிட்டதால அலைய முடியாது. அதனால பட்டம் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

அதிகாலையில் நடைப் பயிற்சி முடிஞ்சு வந்ததும் அன்றைய திருக்குறளை எழுதிட்டுதான் அடுத்த வேலை” என்று பெரு மிதமாக சொன்னார் வரதராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x