Published : 24 Apr 2018 10:02 AM
Last Updated : 24 Apr 2018 10:02 AM

ரூ.2.50 கோடி மதிப்பில் அமைகிறது கோயம்பேடு சந்தை வளாகத்தில் தொழிலாளர் தங்கும் விடுதி: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் கோயம்பேடு சந்தையில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் தொழிலாளர் தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது.

கோயம்பேடு சந்தை வளாகத் தில் மலர், காய்கறி, கனி என 3 மொத்த விற்பனை வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற் றில் 3,251 கடைகள் இயங்கி வருகின்றன. இதை சிஎம்டிஏ நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அலுவலகம் நிர்வகித்து வருகிறது. இங்கு தினமும் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. நாள்தோறும் சுமார் 400 லாரிகளில் பொருட்கள் வந்து இறங்குகின்றன. ஆயிரக்கணக்கான சிறு சரக்கு வாகனங்களில் பொருட் கள் ஏற்றப்படுகின்றன.

4,000 தொழிலாளர்கள்

இச்சந்தையில் சுமை தூக்கும் பணியில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும் பாலானோர் அந்தந்த கடைகளில் உள்ள இடங்களில் இரவு தங்கி ஓய்வெடுக்கின்றனர். சிலர் அருகிலுள்ள தங்கும் விடுதிகளிலும், வாடகைக்கு வீடு எடுத்தும் தங்கி வருகின்றனர். அதனால் அவர் களுக்கு அதிக அளவில் பணம் செலவாகிறது. இதைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தை வளாகத்தில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி அமைக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது:

முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை யில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் முதல்வரும், துணை முதல்வரும், கோயம்பேடு சந்தை வளாகத்தில் தொழிலாளர் தங்கும் விடுதி அமைக்குமாறு அறிவுறுத்தினர்.

தரை, முதல் தளம்

அதனைத் தொடர்ந்து அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்புமாறு கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அலுவலகத்திடம் கேட்கப்பட்டது. அதன்படி, ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்கும் விடுதி தரைதளம் மற்றும் முதல் தளம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.

தரை தளத்தில் கழிவறை, குளியலறை மற்றும் உணவகம் ஆகியவை செயல்படும். முதல் தளத்தில் தொழிலாளர்கள் தங்கிக்கொள்ளலாம். அவர்களை இலவசமாக தங்க வைப்பதா அல்லது குறைந்த கட்டணம் வசூலித்து தங்க வைப்பதா என்பதை அரசு முடிவெடுக்கும். அரசு ஒப்பு தல் கிடைத்தவுடன் 4 மாதத்தில் திட்டம் பயன்பாட்டுக்கு வரும். இந்த விடுதியில் அதிகபட்சமாக 300 பேர் வரை தங்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதுகுறித்து கோயம்பேடு சந்தை மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம். தியாகராஜன் கூறும்போது, “தொழிலாளர் தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். துணை முதல்வரின் முயற்சியால் விடுதி அமைக்கப் பட உள்ளது. இது தொழிலாளர் களுக்கு பயனுள்ளதாக இருக் கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x