Last Updated : 22 Apr, 2018 08:00 AM

 

Published : 22 Apr 2018 08:00 AM
Last Updated : 22 Apr 2018 08:00 AM

அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் 6 மணி நேரம் சிபிசிஐடி சோதனை: முக்கிய ஆவணங்கள், டைரி, புகைப்படங்கள் சிக்கியதாக தகவல்

அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் நேற்று மாலை சிபிசிஐடி போலீஸார் 6 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. பேராசிரியை வீட்டில் இருந்து சில டைரிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் கைப்பற் றினர்.

கல்லூரி மாணவிகளை பாலி யல்ரீதியாக தவறாக வற்புறுத்தியதாக உதவி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து, சிபிசிஐடிக்கு இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டு, கடந்த புதன்கிழமை இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன.

அதையடுத்து, நேற்று முன்தினம் 5 நாள் காவலில் எடுத்து நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.

இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி காவியன் நகரில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத் தத் திட்டமிட்டு அங்கு சென்றனர். நிர்மலா தேவியின் சகோதரர் ரவி, வீட்டைத் திறந்து காட்டினார். அதையடுத்து, வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் 6 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் சில டைரிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று காலை நிர்மலா தேவியிடம் விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 2-வது நாளாக சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி மட்டும் தனியாக விசாரணை நடத்தினார்.

நிர்மலா தேவியின் உடல்நிலை குறித்து, மருத்துவக் குழுவினர் நேற்று பரிசோதனை நடத்தினர். மேலும், நிர்மலா தேவிக்கு தேவையான ஆடைகளை அவரது சகோதரர் ரவி நேற்று கொண்டு வந்து கொடுத்தார். அவரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம் பதிவு

விசாரணையின்போது பேராசிரியை நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதோடு, தனக்கு யார் யாரிடம் எந்த வகையில் தொடர்பு உள் ளது என்பது குறித்து அவர் அளிக் கும் தகவல்களை அடுத்து, குறிப்பிட்ட அந்த நபர்களை பற்றிய தகவல்கள், முகவரி போன்றவை உடனடியாக சேகரிக்கப்படுவதுடன், குறிப்பிட்ட நபரிடம் நேரடி யாக விசாரணை நடத்த தனிப்படையையும் எஸ்பி ராஜேஸ்வரி உடனுக்குடன் அனுப்பி வைக் கிறார். 2-வது நாளாக நிர்மலாதேவியி டம் நடத்தப்பட்ட விசாரணையில், பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாணவிகளுக்கு குறுந்தகவல்

இதுகுறித்து சிபிசிஐடி வட்டாரங்கள் கூறியதாவது: கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு நிர்மலா தேவி வழக்கமாக பல குறுந்தகவல்களையும், வாட்ஸ்அப் மூலம் தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இது பல ஆண்டுகளாகவே தொடர்ந்துள்ளது.

கல்லூரி நிர்வாகத்திலும் நிர்மலா தேவிக்கு ஒத்துழைப்பு இருந்துள்ளது. பாலியல்ரீதியாக பேசியதாக ஆடியோ, வாட்ஸ் அப் தகவல்கள் வெளியாவதற்கு முன்பே இவ்விவகாரம் கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிந்துள்ளது.

இதனால், நிர்மலா தேவியின் நடவடிக்கை அங்கு உள்ள சில பேராசிரியர்களுக்கு பிடிக்கவில்லை. அவரைப் பற்றி பலமுறை புகார் கூறியும் கல்லூரி நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை. கல்லூரி நிர்வாகக் குழு வில் இருந்த குழப்பத்தை நிர்மலா தேவி தனக்குச் சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

தற்போது, அவரது செல்போன் தகவல்களைக் கொண்டு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் சிபிசிஐடி தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, கல்லூரி முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் சிலருக்கும் பல்கலைக்கழகத்தில் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாமனார், கணவரிடம் விசாரணை

விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு பேராசிரியை நிர்மலாதேவியின் மாமனார் பாண்டியன், கணவர் சரவண பாண்டியன் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி முன்னாள் செயலாளர் சவுண்டையா ஆகிய 3 பேரையும் நேற்று இரவு வரவழைத்து சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தீவிர விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் இன்று விசாரணை தொடங்கும் என சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x