Published : 05 May 2024 05:53 AM
Last Updated : 05 May 2024 05:53 AM
சென்னை: அஞ்சல்தலை சேகரிப்பு மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு குறித்த கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
மே 10,11, 17, 18 மற்றும் 24, 25-ம்தேதிகளில் 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்கள் வீதம் மொத்தம் 75 பேர் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள்.
இப்பயிற்சி முகாமில், அஞ்சல்தலை சேகரிப்பு குறித்த அறிமுகம்,அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சியில் பங்கேற்க எவ்வாறு தயாராக வேண்டும், கடிதம் எழுதுதல், தகவல் தொடர்பு திறன், அஞ்சலகங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கற்றுத் தரப்படும்.
6 முதல் 9-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். பதிவுக் கட்டணம் ரூ.250. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு 9444933467, 98848 32872, 99529 65458மற்றும் 044-2854 3199 ஆகிய எண்களில் வேலை நாட்களில் காலை10 முதல் 3 மணி வரை தொடர்புகொள்ள சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT